சிறை பறவை.....
நான் அறிவேன் அதன் துன்பத்தை
நல்ல வேலை கடவுளே....
நான் அப்படியில்லை இனிமேலே....
சிறை பறவை....
சிறகுகள் வெட்டப்பட்டு, எங்கும் பறக்க முடியாமல்...
சிவந்த வானம் தெரிந்தும் கூட
பரந்த புல் வெளி இருந்தும் கூட
காற்றின் ஓசை காதில் விழுந்தும் கூட
சிறகை விரித்து உயர பறக்க
சுதந்திரம் இல்லா சிறை பறவை
நல்ல வேலை, கடவுளே.....
நான் அப்படியில்லை இனிமேலே
மேகக்கூட்டம் தொட்டுப்பார்த்து
மேலே...மேலே..... மேலே.... பறந்து
மனதில் உள்ள கவலை அனைத்தும்
மெல்ல...மெல்ல...மெல்ல...இழந்து
என்றும் இல்லா ஆனந்தத்தில் ஆழ்ந்து
இதற்கு முன் சிரித்ததில்லை
இப்படி ஒரு சிரிப்பை நான்.
உன் தேவைகேற்ப நீ என்னை
உபயோகப்படுத்திக் கொண்டாய்
என தெரிந்தும் கூட
உன்னை நினைக்கும் ஒவ்வொரு நொடியும்
உள் மனதின் ஆனந்தம் புன்சிரிப்பாய் முடியும்.
சிறை பறவை....இனிமேலும் நானில்லை
சுதந்திரத்தை.....எனக்களித்தாய் நீ இன்று.
சுதந்திரமாய்....
சுற்றித் திரிந்து, உயர பறந்து,
சூரியனை தொட்டுவிடும்....
சுதந்திரத்தை....எனக்களித்தாய் நீ இன்று.
அழகான இந்த உணர்வை
ஆழமாய் உணர்ந்து பார்க்க
இந்த யுகம் போதாது
கடவுளே... இந்த யுகம் போதாது.
சிறை பறவை....இனிமேலும் நானில்லை
சுதந்திரத்தை.....எனக்களித்தாய் நீ இன்று .
No comments:
Post a Comment